Wednesday, October 02, 2013

அரிய இதழ்கள் - 1!

தலைப்பைப் பார்த்துவிட்டு நான் ஏதாவது ரொம்ப பழைய முத்து காமிக்ஸ் பற்றி எழுதப்போகிறேன் என்று நினைத்தால் ரொம்ப சாரி! இந்த தொடரில் இப்போது என்னிடம் உள்ள, ஆனால் எனக்கு மிகவும் தண்ணி காட்டிய புத்தகங்களைப் பற்றி எழுதப்போகிறேன்.

இந்த வரிசையில் முதலில் வருவது சுஸ்கி விஸ்கி தோன்றும் "The Dancing Cards", தமிழில் ராஜா ராணி ஜாக்கி(Mini Lion - 19).




முதல் முறையாக வண்ண சுஸ்கி விஸ்கி புத்தகத்தை பார்த்தது 2000த்தில் என்று நினைக்கிறன்.  ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் பக்கத்தில் இருந்த ஒரு சீன யுவதி சுஸ்கி விஸ்கி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். முழுவதுமாக தலையை திருப்பி அந்த புத்தகத்தைப் பார்க்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண்ணும் ஒரு சில நிறுத்தங்கள் தாண்டி இறங்கிப்போய்விட்டார். அதனால் அது எந்த மொழி, புத்தகத்தின் பெயர் என்ன என்று தெரியாமலேயே போய்விட்டது. ஆனால் அது வண்ணத்தில் இருந்த புத்தகம் என்று மட்டும் மனதில் நன்றாக பதிந்து விட்டது. கொஞ்ச நாளில் அதைப்பற்றி மறந்துவிட்டேன். 

சென்னை RT முருகனுடன்,2002 என்று நினைக்கிறேன், ஐரோப்பாவிலிருந்து வரும் காமிக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் சுஸ்கி விஸ்கி ஆங்கிலத்தில் வருவதாகவும் பல வருடங்களுக்கு முன்னர்(90களில்) தமிழில் வந்திருந்த ராஜா ராணி ஜாக்கி புத்தகத்தை ஆங்கிலத்தில் பார்த்ததாகவும் அவர் கூறியதாக சொன்னார்.  எனக்கும் நான் பேருந்தில் பார்த்தது ஞாபகம் வந்தது. இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் மீண்டும் எனது தேடுதலை ஆரம்பித்தேன். பல சுஸ்கி விஸ்கி ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் ராஜா ராணி ஜாக்கி பற்றி மட்டும் ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை. அப்போதுதான் சுஸ்கி விஸ்கி பற்றிய ஆங்கில புத்தகங்கள் பற்றிய தகவல் அடங்கிய இணைய பக்கம் கிடைத்தது. அதிலிருந்து புத்தகத்தின் பெயர் கிடைத்தது. அதன் பின்னர் சுலபமாக கிடைத்துவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு சீரியலாக வந்த புத்தகங்கள் தவிர்த்து தனியாக வந்த புத்தகங்களை தேடுவது கொஞ்சம் கஷ்டம் என்று பிறகுதான் தெரிந்தது. ஏனென்றால் தனியாக வந்த புத்தகங்களெல்லாம் கொஞ்சமாகவே பிரிண்ட் செய்யப்பட்டவை. அது மட்டுமில்லாமல் ஒரு சில புத்தகங்கள் ஒரு சில நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிந்தது. பல நாள் தேடலுக்குப் பிறகும் புத்தகம் இருக்கும் கடையோ, ebay listing-கோ கண்ணில் படவேயில்லை. ebay-ல் இருந்த புத்தகங்களெல்லாம் தமிழில் வந்தவை அல்ல. மேலும் அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சுஸ்கி விஸ்கி ஆங்கில புத்தகத்தையும் வாங்கவில்லை. அதனால் மீண்டும் ஒரு தொய்வு. 

2003இல் சவுதி அரேபியாவில்(of all the places in the world) இருந்தபோது "The Diamond Boomerang" கிடைத்தது. அதுதான் நான் முதன் முதலில் வாங்கிய சுஸ்கி விஸ்கி ஆங்கிலப்புத்தகம். 2004-ல் பெங்களூரில் இருக்கும் Blossom Book House சென்றிருந்தபோது 6 சுஸ்கி விஸ்கி புத்தகங்கள் மொத்தமாக கிடைத்தது. அவையும் இந்த "The Diamond Boomerang" சீரிஸ்ல் வந்தவையே.



http://suskeenwiske.ophetwww.net/albums/engels/bob.php

இந்த புத்தகங்கள் கிடைத்தது ராஜா ராணி ஜாக்கி புத்தகத்தை தேடும் பணியை மீண்டும் துவக்கி வைத்தது. அதே சமயத்தில் மற்ற சுஸ்கி விஸ்கி ஆங்கில புத்தகங்களையும் வாங்க ஆரம்பித்தேன்.

விரைவிலேயே மற்ற இரண்டு சீரிஸ்ல் வந்த புத்தகங்களை கடகடவென வாங்க ஆரம்பித்தேன்.

http://suskeenwiske.ophetwww.net/albums/engels/spikesuzy.php

http://suskeenwiske.ophetwww.net/albums/engels/ww.php

இருந்தாலும் ராஜா ராணி ஜாக்கி மட்டும் ebay-ல் வந்தபாடில்லை. மற்ற இணைய தளங்கள் வழியாகவும் கிடைக்கவில்லை. மீண்டும் கொஞ்சம் மந்தகாலம். பல மாதங்கள் கழித்து திரும்பவும் ஒருநாள் இந்த புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது புதிதாக வந்த சுஸ்கி விஸ்கி புத்தகம் பற்றிய விபரம் தெரிந்தது. "The Energetic Rascals" என்ற புத்தகம் Electrabel என்ற நிருவனத்துடன்  சேர்ந்து  வெளியிடப்படுவது தெரிந்தது. இந்த புத்தகத்தின் PDF கோப்பு அந்த நிறுவனத்தாலேயே கேட்டவர்களுக்கெல்லாம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களும் கேட்பவர்களின் நாட்டு முகவரிக்கேட்ப டச்சு மொழியிலோ, பிரெஞ்சு மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ இலவசமாக கேட்டவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டது. நானும் எனது விண்ணப்பத்தை அவர்களின் இணையதளத்தில் பதிவுசெய்தேன்.







அதே நாளன்று ராஜா ராணி ஜாக்கி Ebay-ல் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது. அவ்வளவுதான் உடனடியாக  எனது முதல் Bid-ஐ பதிவு செய்தேன். Bidding முடியும் நாளன்று அதிகபட்ச தொகையை போட்டுவிட்டு தூங்கப் போகலாம் என்றால், முதல் மூன்று நாட்களில் ஏறக்குறைய 20 பிட்டிங் பதிவாகிவிட்டது. அதனால் இது கண்டிப்பாக கடைசி நேர  Biddingல் மட்டுமே ஜெயிக்க முடியும். ஆனால் Bidding முடியும் நேரம் ஐரோப்பாவில் மாலை நேரம். எனக்கோ அதிகாலை 2 மணி. வேறு வழி, இரவு 1.50க்கு அலாரம் செட் செய்து விட்டு தூங்கப்போனேன். அலாரம் அடித்து எழுந்து போய் பார்த்தால் மேலும் பல Bids. EUR 35-ஐ தாண்டிவிட்டது. வழக்கம்போல Bidding முடிவதற்கு 20 வினாடிகளுக்கு முன்னர் என்னுடைய EUR 50 Bid-ஐ பதிவு செய்து ஒரு வழியாக புத்தகத்தை ஜெயித்தேன். உடனடியாக அதற்கான பணத்தை Paypal வழியாக செலுத்திவிட்டு அதன்  பின்னரே தூங்கப்போனேன்.

சில நாட்களில் அந்த புத்தகமும் வந்து சேர்ந்தது. அதே நாளன்று இலவச "The Energetic Rascals" புத்தகமும் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுத்தது.






இந்த விபரத்தை RT முருகனிடம் தெரிவித்தபோது அவருக்கும் ராஜா ராணி ஜாக்கி ஒரு Copy வேண்டும் என்று கேட்டார். அவருக்காக இந்த புத்தகத்தை இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் இன்றுவரை இரண்டவது பிரதி கிடைத்தபாடில்லை.

Other Links about சுஸ்கி விஸ்கி;
http://kakokaku.blogspot.sg/2009/03/blog-post_20.html
http://www.luckylimat.com/2010/01/blog-post.html
http://www.luckylimat.com/2010/01/blog-post.html


அவ்வளவுதான் இப்போதைக்கு. மீண்டும் சந்திப்போம்.

Happy Reading!