Wednesday, April 14, 2010



ராசா... இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் என்று கேள்விப்பட்டேன்... மவராசனா இரு!

நீ என்னதான் ஆங்கிலத்தில் எழுதினாலும் நான் தமிழிலேயே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொடுத்திருக்கிறேன் என்பதை கவனி...ஆங்கிலத்திலும் தருகிறேன். இந்தா பிடி.. Happy Birthday! இதோ உனக்காக ஒரு சிறப்பு பதிவு. தமிழில் வந்த சில காமிக்ஸ்-களின் ஆங்கில மூலம்.

என்னுடைய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் 10 வயதில் ஆரம்பமானதென்றாலும் ஒரு முக்கிய திருப்பம் என்பது இந்த நூற்றாண்டு துவக்கதிலேதான் வந்தது. இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் என்னிடம் படிக்க அவ்வளவாக புத்தகம் இல்லை. அதனால் நான் சென்ற நாடுகளில் உள்ள புத்தகங்களையும்,internet-டிலும் படிக்க நேர்ந்தது. அப்படி தேடுகையில் கிடைத்ததுதான் தமிழ் காமிக்ஸ்களின் ரிஷிமூலங்களும், நதிமூலங்களும். முதன்முதலில் ஒரு தமிழ் காமிக்ஸ் ஹீரோவை ஆங்கிலத்தில் பார்த்தேன் என்றால் அது இரும்புக்கை மாயாவி தான். internet-டில் முதன்முதலில் எனக்கு மாட்டியது Steel Claw ஆங்கில இதழ்கள்தான்.


இந்த புத்தகங்களை ஆர்டர் செய்ய அப்போது என்னிடம் credit card இல்லை. அதனால் international Bank Draft எடுத்து அனுப்பிவிட்டு தினம் தினம் milehighcomics.com கு மெயில் அனுப்பி டிராப்ட் வந்து விட்டதா வந்துவிட்டதா என்று கேள்வி. ஒரு கட்டத்தில் அவர்களே வெறுத்துப்போய் காமிக்ஸ் புத்தகங்களை போஸ்ட் செய்து விட்டனர், என்னுடைய டிராப்ட் கண்டிப்பாக வந்து சேரும் என்ற நம்பிக்கையில். அவர்கள் போஸ்ட் செய்தபின்னர் தினம் தினம் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிடுவேன் லெட்டர் பாக்ஸ்-ஐ திறப்பதற்கு. இந்த காத்திருப்பு ஒரு சுகமான வேதனைதான் போங்கள்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நான் முதன்முதலில் தமிழில் படித்த கதையும் அதுதான்.

யார் அந்த மாயாவி முத்து காமிக்ஸின் 100 வது மலர். ஆனால் நான் படித்த முதல் தமிழ் காமிக்ஸ் கதை இதுதான். கண்டதுமே காதல் வந்து விட்டது, தமிழ் காமிக்ஸ் மேல். அது இன்றுவரை தொடர்கிறது.


அதன் பின்னர் பல புத்தகங்களை வாங்கினாலும் இந்த இரும்புக்கை மாயாவி இதழ்களுக்கு என் மனதில் எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய்க்கொண்டிருந்த இந்த ஷாப்பிங் கொஞ்சநாளாக நொண்டியடிக்கிறது. புத்தகங்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. கிடைக்கும் புத்தகங்களும் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது.

ஆனால் சமீப காலமாக வந்துகொண்டிருக்கும் விளம்பரங்கள் என்னுடைய ஆவலை நிறையவே தூண்டியுள்ளன என்றுதான் சொல்லவேண்டும். அதில் குறிப்பாக மூன்று புத்தகங்களை நான் ஆவலுடம் எதிர் நோக்குகிறேன்.

முதலாவது, Gentleman Detective ரிப் கிர்பியின் புத்தகம். முதல் தொகுப்பு ஏற்கனவே வந்துவிட்டது.



வாங்கிபடித்தும் விட்டேன். அற்புதமான தரம். தமிழில் எப்போது இந்த தரத்தில் வரும் என்று ஏங்கவைத்து விட்டது.

இந்த புத்தகத்தை பற்றி நிறைய negative opinion வந்தாலும் எனக்கு நிறைவை தந்த புத்தகம். இதன் இரண்டாம் தொகுப்பு மே மாதம் வருகிறது.



அடுத்ததாக வரவிருப்பது நம் எல்லோருடைய மனம் கவர்ந்த சீக்ரெட் ஏஜென்ட் பிலிப் காரிகன்.



அட்டைப்படமே பட்டயகிளப்புகிறது. ஜொள்ளு விட்டுக்கொண்டு எதிர்பார்கிறேன் இந்த தொகுப்பை.

கடைசியாக வரவிருப்பது என்னுடைய இன்னொரு favorite.

சிஸ்கோ கிட்!


வரும் தேதி அறிவிக்கப்படவில்லை ஆனாலும் இந்த பதிப்பகத்தில் இருந்து வரும் புத்தகங்களின் தரம் மிக உயர்தரம்.

வரவிருக்கும் கதையின் முதல் panel.


உங்களுக்கு Spectrum காமிக்ஸ் அறிமுகம் உண்டு என்றால் கண்டிப்பாக Heart of Juliet Jones தெரிந்திருக்கும். இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ள Mary Perkins On Stage மற்றும் Heart of Juliet Jones, புத்தக தரத்திற்காகவே வாங்கப்பட வேண்டியவை.

மேலும் பல ஆங்கில புத்தகங்களை பற்றி விரைவில் வேறொரு பதிவில் தகவல் தருகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான்.

அட மறந்தே போய்விட்டேன். எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முத்து விசிறி