இந்த நல்ல நாளிலே பயங்கரவாதியின் தாய் மொழியாம் Hebrew இல் வந்த பாம்பு தீவின் அட்டை உங்கள் பார்வைக்கு.

இந்த கதையில் மாயாவி மோதுவது ஒரு டாக்டருடன் என்பதால் இந்த அட்டை இங்கே இடம்பிடிக்கிறது. அப்படா, ஒரு வழியாக டாக்டரையும் ஒரு முத்து காமிக்ஸையும் லிங்க் செய்துவிட்டேன்.
இந்த கதையின் தமிழ் மொழி வெளியீட்டு அட்டைபடம்.

தமிழை விட்டு பிற மொழி மாயாவியை பற்றி பேசுவதால் இன்னும் சில அட்டைகள் உங்கள் பார்வைக்கு.


ஸ்கேன் உபயம் திரு RTM. நன்றிகள் பல.
என்னதான் டாக்டரை முதல் வரியில் வாழ்த்திவிட்டேன் என்றாலும் வயது வித்தியாசம் கொஞ்சம் உறுத்துகிறது. எனவே தமிழக அரசியல் பாணியில்,
''வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!"