Thursday, December 02, 2010

இரும்புக்கை நார்மன்!!!

''ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு'' - கமல்ஹாசன் டு நாசர் படம் : குருதிப் புனல்.இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். 


ஜம்போ ஸ்பெஷல் மற்றும் முத்துகாமிக்ஸ் பற்றி சில Media கவரேஜ் நடப்பதும் உடனடியாக பல காமிக்ஸ்கள் வெளிவர உதவும் என்பது என் எண்ணம். புதிதாக வாசகர்கள், புத்தகங்கள் கிடைத்தால் நல்லதுதான்.


முத்து காமிக்ஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இரும்புக்கை மாயாவிதான்! நிறைய பேருக்கு தமிழ் காமிக்ஸ் என்றாலே முத்து/லயன் காமிக்ஸ்தான். அதனால் தமிழில் காமிக்ஸ் என்றாலே சிலருக்கு இரும்புக்கை மாயாவி மட்டுமே ஞாபகம் வருவது இயற்கையே. (GMAT/GRE படிப்பவர்களுக்கு இன்னொரு ப்ராக்டிஸ் situation)


இரும்புக்கை மாயாவியினால் நிறைய முத்து காமிக்ஸ் விற்றது என்பதால் அவர் முத்து காமிக்ஸின் flagship-ஹீரோ என்று சொன்னால் மிகையாகாது. அவர் பெயரை பயன்படுத்தி பல காமிக்ஸ்கள் வந்தன. இதுபற்றி பயங்கரவாதி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்கிறார். இரும்புக்கை பெயரை பயன்படுத்தும் மற்றொரு முயற்சிதான் இரும்புக்கை நார்மன் கதைகள். என்னதான் இரும்புக்கை பெயரை பயன்படுத்தினாலும் கதை இருந்தால்தான் விற்பனை தேறும். இரும்புக்கை ஏஜென்ட் சரியானபடி போகாததற்கு கதை வலுவில்லாதது ஒரு முக்கிய காரணம். ஆனால் இரும்புக்கை நார்மன் ஒரு ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சீரிசில் வந்த ஆறு கதைகளையும் திரு விஜயன் பிரசுரித்ததே அதற்கு ஒரு சாட்சி.

இரும்புக்கை நார்மன் Battle Picture Weekly-ல் வந்த ஒரு தொடர்கதை. பட்டியல் இதோ:


இரும்புக்கை நார்மன் ஒரு Special ஹீரோ என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இவர் வந்த இதழ்கள் எல்லாமே Special தான்(86 பொங்கல் மலர், 86 தீபாவளி மலர், 86 கோடை மலர், லயன் 75வது இதழ்). 

தமிழில் முதல்முதலில் இவர் அறிமுகம் செய்யப்பட்டது லயன் 86 பொங்கல் மலர்(இதழ் எண் 21) -ல் தான். விபரங்கள் இதோ(அ.கொ.தீ.க ஸ்டைலில்):கதை
மனித எரிமலை(& மரணப் பணி)!
இதழ்
லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு
21
முதல் பதிப்பு
ஜனவரி 1986 (பொங்கல் மலர்)
மறுபதிப்புகள்
மரணப் பணி(காமிக்ஸ் கிளாசிக்ஸில்) 
பதிப்பகம்
லயன் காமிக்ஸ்
ஆசிரியர்
S.விஜயன்
அச்சிட்டோர்
முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
மூலம்
Gaunt (ஆங்கிலம்)
இதழ்
Battle Picture Weekly (Weekly)
வெளியீடு
IPC MAGAZINES LTD.
முதல் பதிப்பு
25 Jun 77 TO 16 Jul 77(The Haunted Man)
23 Jul 77 to 27 Aug 77(Blitzkreig)
கதை   
John Wagner
ஓவியம்
John Hooper
தமிழில்
S.விஜயன்
பக்கங்கள்
(கருப்பு வெள்ளை)
சைஸ்
6"x8"
விலை
ரூ:3/- (1986 முதல் பதிப்பின் போது)/ரூ:10/-(CC)


முதல் அறிமுகத்திலேயே இவருக்கு இரண்டு கதைகள். ஆம்! மனித எரிமலை மற்றும் மரணப் பணி. பின்னொருநாளில் விஜயன் இவரைப் பற்றி குறிப்பிடும்போது இவர் ஒரு Pathos ஹீரோ என்று குறிப்பிடுவார்(XIII போல). என்னதான் இவர் ஆக்க்ஷன் ஹீரோ என்றாலும், பின்னணியில் ஒரு சோக கீதம் இசைப்பது கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.


இந்த இதழுக்கான விளம்பரங்கள் இதழ் எண் 19 மற்றும் 20 -லேயே வந்துவிட்டது. இதோ உங்கள் பார்வைக்கு:


முதல் விளம்பரம்(இதழ் 19)
இரண்டாம் விளம்பரம்(இதழ் 20)
 இந்த இதழின் முதல் கதை மனித எரிமலை. இந்த கதையில் இரும்புக்கை நார்மனுக்கு எப்படி இரும்புக்கை வந்தது என்பது தெரியவருகிறது. பாரிஸ் வெறிநாய்(Paris Butcher) என்று அழைக்கப்படும் ஜெர்மன் ஜெனரல் லூதலிடம் ஆங்கிலேய உளவாளி நார்மன் மாட்டிக்கொள்கிறார். லூதல் நார்மனுக்கு தந்த சித்ரவதை காரணமாக நார்மன் தனது வலது கையை இழக்கிறார். இங்கிலாந்து திரும்பிய நார்மனுக்கு ஆபீஸ் வேலை கொடுக்கிறது உளவு ஸ்தாபனம். அதை ஏற்க விரும்பாத நார்மன் தன நண்பனின் உதவியுடன் இரும்பு விரல்களை செய்து மாட்டிக்கொண்டு இரும்புக்கை நார்மன் ஆகிறார். தனது உளவு வேலையையும் விட்டுவிடுகிறார்.  தனது சொந்த முயற்சியில் லூதலை பழிவாங்க புறப்படுகிறார். ஆனால் பல தடைகள் வருகின்றன. விரைவிலேயே அவரது போராட்டம் லூதலுடம் மட்டுமல்ல, தனக்குத்தானே கூடத்தான் என்று தெரிந்துகொள்கிறார். இதைனை மீறி லூதலை பழிவாங்குகிறாரா என்பதுதான் கதை. 


இந்த கதையின் முதல் பக்கம், தமிழில்.
ஆங்கில மூலம்:
வசனங்களை கவனிக்கவும்.பிற்காலத்தில் கமல்ஹாசன் இந்த வசனத்தை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார். 


இந்த கதை வந்த இதழின் அட்டைப்படம்.இதே இதழில் உள்ள இரண்டாவது கதை மரணப் பணி. இனிமேல் உளவுப்படையில் சேரப்போவதில்லை என்ற நார்மனின் உறுதிமொழியுடன் கதை ஆரம்பிக்கிறது. ஆனால் எப்படி அவர் உளவுப்படையில் சேர்ந்து ஜெர்மானிய ஜெனரல் கோயரிங்கை தேடி செல்கிறார் என்பதுதான் மீதிக்கதை. இந்த கதையின் கிளைமாக்ஸ் நார்மனின் தோல்வியுடன் முடிகிறது. இதற்கு காரணம் அவருடன் இந்த பணிக்காக வரும் மற்றொரு உளவாளியின் உள்குத்து. தோல்வியுடன் திரும்பினாலும் நார்மனுக்கு உளவுப்படை தேவை, உளவுப்படைக்கு நார்மன் தேவை என்பதுடன் கதை முடிகிறது.


இந்த கதையின் முதல் பக்கம், தமிழில்
 
ஆங்கிலத்தில்:


இந்த கதை(மரணப் பணி) கீழே உள்ள CC(10)-ல் மறுபதிப்பாக வந்தது, மிகச்சுமாரான சித்திர தரத்துடன்.


ஆசிரியர் இந்த கதையின் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அடுத்த கதை பற்றி விளம்பரம் வெளியிட்டு விட்டார். 
அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. வாசகர்களின் கடிதங்களே அதற்கு சாட்சி(இதழ் எண் 22)
இந்த கேரக்டரின் வெற்றியினால் தான் Specials வர ஆரம்பித்தது என்று சொன்னால் மிகையாகிவிடும். ஆனால் அது கண்டிப்பாக ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.   இதழ் எண் 22 ல் ஆசிரியர் முதலாவது ஸ்பெஷல் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 
இந்த முதல் ஸ்பெஷலில் நார்மனுக்கு ஒரு இடம் :

கதை எண் 3 to 6 பற்றிய எனது அடுத்த பதிவை விரைவில் எதிர் பாருங்கள். 


இந்த கதைகளின் ஓவியர் John Cooper. இவர் வரைந்த மற்ற கதைகள் Johnny Red, ஒற்றை கண் ஜாக் மற்றும் Judge Dredd(நீதி தேவன்). இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள :

Signing off for now!!!
MF

34 comments:

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

King Viswa said...

மீ தி செகண்டு.

//பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!//

அதே, அதே, சபாபதே.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

//வசனங்களை கவனிக்கவும்.பிற்காலத்தில் கமல்ஹாசன் இந்த வசனத்தை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார். //

ஆஹா! கமல்ஹாசன் காமிக்ஸிலிருந்தும் காப்பியடிக்க ஆரம்பித்து விட்டாரா?!!

என்ன கொடுமை ஐயா இது! நண்பர் கருந்தேளுக்கு தெரிந்தால் கொதித்து விடுவாரே!

தலைவர்,
அ.கொ.தீ.க.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

மீ தி தேர்டு.

அதுவும் நம்ம சிபி அண்ணன் வர்றதுக்கு முன்னாடியே. எப்புடி?

வெல்கம் பேக், முத்து விசிறி சார்.

King Viswa said...

இந்த கதாநாயகன் ஒரு மறக்கமுடியாத பாத்திரம். இன்றும் அந்த முதல் கதையை படிக்கும்போது மனம் கனத்த ஒரு வலியுடனே இருக்கும். அதுவும் அந்த ஓவியங்கள், நார்மனின் கண்கள், பாரிஸ் வெறிநாயின் மறக்கமுடியாத அந்த வசியமூட்டும் திறன், கடைசியில் இருளில் அவனை பழிவாங்கும் நார்மன் என்று ஒரு அட்டகாசமான கதையமைப்பு இது.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

கமல் ஹாசன் இதிலிருந்து தான் சுட்டாரா? கொடுமைஸ் ஆப் இந்தியா.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

//கதை எண் 3 to 6 பற்றிய எனது அடுத்த பதிவை விரைவில் எதிர் பாருங்கள். //

பரபரப்பா ஆரம்பிச்சு இப்படி பாதியிலே இரத்தப்படலம் மாதிரி தொடரும்னு போட்டுட்டீங்களே?!!

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

Cibiசிபி said...

// ''ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு'' - கமல்ஹாசன் டு நாசர் படம் : குருதிப் புனல். //

நியூயார்க்கில் மாயாவி கதையை எந்திரனில் பயன் படுத்தியது போல ;-)

//என்ன கொடுமை ஐயா இது! நண்பர் கருந்தேளுக்கு தெரிந்தால் கொதித்து விடுவாரே! //

ஏற்கெனவே கொதித்துபோய் தான் இருக்கிறார் :))
.

Cibiசிபி said...

//இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.//

உதாரணமாக உங்களிடமிருந்து ஒரு முத்தான பதிவு வந்துள்ளதே ;-)
.

Cibiசிபி said...

//அதுவும் நம்ம சிபி அண்ணன் வர்றதுக்கு முன்னாடியே. எப்புடி? //

என்ன கொடும சார் இது :))
.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!

http://ta.indli.com/seithigal/இரும்புக்கை-நார்மன்

தலைவர்,
அ.கொ.தீ.க.

Mahesh kumar said...

Nice post and lot of information about Norman.
Is his name "Gaunt" in English?

SIV said...

சார், இது போல அடிக்கடி பதிவு போடுங்கள்.....
நார்மன் ஒரு இறுக்கமான கதாபாத்திரம். அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை...

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

இரும்புக்கை நார்மனும் XIIIம் நிறையை ஒற்றுமைகளை கொண்டர்வகள். இருவரையும் படைத்திட்ட ஓவியர்கள் அசாத்திய திறன் கொண்டவர்கள். எனக்கு காமிக்ஸ் அறிமுகமான காலகட்டத்தில்
ஸ்படைரின் கொலைப்படையோடு நார்மனின் மனித எரிமலையும் எனக்கு படிக்க கிடைத்தது. என்றும் நீங்காத பாதிப்பை ஏற்படுத்தவல்லவை நார்மனின் கதைகள்!

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

//is his name "Gaunt" in English?//

அப்சல்யூட்லி.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

இன்னிக்குன்னு பார்த்து நான் குடையோ, ரெயின்கோட்டோ கொண்டு வரலை.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார் வேறு கமென்ட் போட்டு இருக்கார்.

என்ன பண்ணுவேன் ஆண்டவா?

BN USA said...

Dear MF,
Interesting post on Gaunt. I will have to search my battle picture weekly collection to see if I have that issue.

I hope you have received your jumbo special issue. I am still waiting for mine which was posted from sivakasi on Nov 2 via speed post. The US postal service totally sucks.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

சார், //இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

Suresh said...

Superb.
Can you put a post on Sherlock Shomes. which came in Mini Lion.
A mock of Sherlock Homles who can change to anyything.
I always lough when I read the book "virpanikku oru Pei." Mini Lion. I have been searching for how remaining books but could not find them :(

காமிக்ஸ் பிரியன் said...

முத்து விசிறியின் முத்தான பதிவு என்று பயங்கரவாதி கூறியது சரிதான். அருமையான பதிவு.

ஆனாலும் நீங்களும் லயன் காமிக்ஸ் போல பாகங்களாக பிரிக்க ஆரம்பித்து விட்டீர்களே?

காமிக்ஸ் பிரியன் said...

நார்மனின் மூன்றாவது கதையாகிய இரத்தக்கண்ணீர் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்று ஆசிரியர் கூறி இருப்பார்.

அந்த கதையின் முடிவில் வரும் சம்பவங்கள் மனதை நெருடும் வகையில் அமைந்து இருக்கும், சூப்பர் கதை அது.

காமிக்ஸ் பிரியன் said...

இந்த கதையின் அட்டைப்படம் வரைந்தவர் யாரென்று சொல்ல முடியுமா? (மனித எரிமலை?) உணர்சிகளின் பிழம்பாக நார்மனை சித்தரித்த விதம் உண்மையிலேயே இன்னமும் மனக்கண் முன்னே நிற்கிறது.

அதுவும் அந்த பெரிய பெரிய படங்கள், மிகவும் குறைவான வசனங்கள் என்று இந்த புத்தகமே வழக்கமான லயன் காமிக்ஸ் புத்தகங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும். அதுவரை வந்த லயன் காமிக்ஸ் கதைகளுக்கும் இந்த கதைக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கும்.

காமிக்ஸ் பிரியன் said...

இந்த குருதிப்புனல் வசனம் உண்மையிலேயே இப்போதுதான் ஒன்றுபடுத்தி பார்க்கிறேன். இந்த விஷயம்தான் உங்களையும் என்னை போன்ற சாதாரண காமிக்ஸ் ரசிகனையும் வேறுபடுத்துகிறது.

காமிக்ஸ் பிரியன் said...

//Can you put a post on Sherlock Shomes. which came in Mini Lion.
A mock of Sherlock Homles who can change to anyything.
I always lough when I read the book "virpanikku oru Pei." Mini Lion. I have been searching for how remaining books but could not find them //

அவரது பெயர் ஹெர்லக் ஷோம்ஸ். லயனிலும் மினி லயனிலும் இதுவரை இரண்டு கதைகள் வந்துள்ளன.

லயன் - வாரிசு வேட்டை
மினி லயன் - விற்பனைக்கு ஒரு பேய்

காமிக்ஸ் பிரியன் said...

ஹையா , மீ தி 25வது.

The Spider said...

HATS OFF TO YOU, MY FRIEND.

WONDERFUL POST AND I LOVED EACH WORD OF IT.

The Spider said...

SOME OF THE PICTURES ARE GOING OUT OF THE FRAME IN THE COMPUTER IN MY INTERNET EXPLORAR USE.

The Spider said...

WAITING FOR THE 2ND PART OF THE POST WHERE MY FAVOURITE STORY IN THIS SERIES IS GOING TO APPEAR.

CAPTAIN HECHAI said...

இரும்புக்கை நார்மன் கதாபாத்திரமும் மிகவும் அற்புதமானதுதான் கூடுதலாக கதை இல்லாததுதான் குறை,என்றாலும் நமது இரும்புக்கை மாயாவியை எட்டமுடியாது. இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள். இரும்புக்கை நர்மனுக்கு எப்படியோ ? தெரியாது? மிக அருமையான பதிவு, அழகான தமிழில்.....
அன்புடன்
கேப்டன் ஹெச்சை.

CAPTAIN HECHAI said...

இரும்புக்கை நார்மன் கதாபாத்திரமும் மிகவும் அற்புதமானதுதான் கூடுதலாக கதை இல்லாததுதான் குறை,என்றாலும் நமது இரும்புக்கை மாயாவியை எட்டமுடியாது. இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள். இரும்புக்கை நர்மனுக்கு எப்படியோ ? தெரியாது? மிக அருமையான பதிவு, அழகான தமிழில்.....
அன்புடன்
கேப்டன் ஹெச்சை.

காமிக்ஸ் காதலன் said...

புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

Cibiசிபி said...

முத்து விசிறி அவர்களே உங்களுக்கும் மற்றும்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

nitharsun said...

9677142992 for lion comics call me