Friday, November 30, 2012

ரொம்பநாள் ஆகிவிட்டது இங்கே வந்து! 

பெரிய பதிவுகளை பற்றி யோசித்தாலே அதில் உள்ள கஷ்டத்தை நினைத்து அந்த வேலை அப்படியே தள்ளிக்கொண்டே போகிறது. அதனால் இனி சின்ன சின்ன பதிவுகளாக முயற்சிக்கலாம் என்று நினைக்கிறன். பார்க்கலாம் இது எப்படி போகிறது என்று. அந்த வரிசையில் முதல் பதிவு.

ஒரு கதை தலைப்பு இரண்டுமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எனக்கு தெரிந்த வரை ஒரே அட்டைப்படம் இரு இதழ்களில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது ஒரே ஒரு முறைதான் என்று நினைக்கிறன்.

முத்து காமிக்ஸின் இதழ் எண் 45 - ன் அட்டைப்படம் இங்கே!




இதே அட்டைப்படம் சக்தி காமிக்ஸில் வந்த அதே பெயர் கொண்ட புத்தகத்திலும் உபயோகப்படுத்தப்பட்டது.


NBS வேலைகள் முழு வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.


நீங்கள் இதுவரை முன்பதிவு செய்யவில்லை என்றால் உடனடியாக செய்யவும்.

மீண்டும் ஒரு குரும்பதிவோடு விரைவில் சந்திப்போம்.

13 comments:

Rafiq Raja said...

இரண்டு புத்தகமுமே கைவசம் இல்லை, எனவே இதில் கண்டு களித்து கொள்கிறேன். :D

King Viswa said...

நெடு நாள் கழித்து வந்திருக்கும் எங்கள் அருமை ஆசான் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

இப்படி சிறிய இட்டு எம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன்

King Viswa said...

காமிக்ஸ் அல்லாத புத்தகம் என்று கணக்கில் கொண்டால், இப்படி ஒரே அட்டைப்படம் இரண்டு முறை வந்துள்ளது.

வேதாளர் / ஃபேன்டம் / முகமூடி வீரர் மாயாவி தோன்றும் கதை (தி டிரம்மர் ஆப் டிம்பேணி - இது தமிழில் ராணி காமிக்ஸில் மரண முரசு என்ற பெயரில் வந்துள்ளது).இதன் இந்திரஜால் காமிக்ஸ் அட்டைப்படமும் ஒரு மாயாஜால மந்திரக் கதை புத்தகத்தின் அட்டைப்படமும் ஒன்றே.

V Karthikeyan said...

Rare find, i too remember a corrigan story (forgot the name)that came in Megala comics and Muthu comics with similar cover but not like this exact copy.

- V. Karthikeyan

TSI-NA-PAH said...

Nice post. Welcome back :-)

கிருஷ்ணா வ வெ said...

Nice Small Post.Eagerly Waiting For the Coming soon Kurumpathivukal.

I have not Read this story.i hope a small info abt the Story would have complete the Post.

welcome back sir.

முத்து விசிறி said...

Rafiq : சக்தி காமிக்ஸில் இருந்து வந்த மற்ற அட்டைப்படங்களையும் விரைவிலேயே பார்க்கலாம்!

முத்து விசிறி said...

King Viswa : உங்கள் தகவலுக்கு நன்றி. நான் குறிப்பிட்டது முத்து காமிக்ஸ் குழுமத்திலிருந்து வந்த புத்தகங்களைப் பற்றி மட்டுமே.

அடுத்த ஆண்டு(2013) சென்னை வந்தால், சென்னை புத்தக கண்காட்சியில் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

முத்து விசிறி said...

V Karthikeyan : வருகைக்கு நன்றி

முத்து விசிறி said...

Sounder SS : வருகைக்கு நன்றி

முத்து விசிறி said...

Krsihna : வருகைக்கு நன்றி! கதைகளைப் பற்றியும் பதிவில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

Erode M.STALIN said...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள் நன்றி. இரண்டு கதைகளும் ஒன்றா அல்லது அட்டைப்படம் மட்டும் தானா?

Padmalochan karthikeyan said...

Wow. How fortunate I am to have Muthu Comics ,Madalaya Marmam'! I got it from a boy by exchanging 'Nadodi Remi'which I had two copies then.