Wednesday, October 02, 2013

அரிய இதழ்கள் - 1!

தலைப்பைப் பார்த்துவிட்டு நான் ஏதாவது ரொம்ப பழைய முத்து காமிக்ஸ் பற்றி எழுதப்போகிறேன் என்று நினைத்தால் ரொம்ப சாரி! இந்த தொடரில் இப்போது என்னிடம் உள்ள, ஆனால் எனக்கு மிகவும் தண்ணி காட்டிய புத்தகங்களைப் பற்றி எழுதப்போகிறேன்.

இந்த வரிசையில் முதலில் வருவது சுஸ்கி விஸ்கி தோன்றும் "The Dancing Cards", தமிழில் ராஜா ராணி ஜாக்கி(Mini Lion - 19).




முதல் முறையாக வண்ண சுஸ்கி விஸ்கி புத்தகத்தை பார்த்தது 2000த்தில் என்று நினைக்கிறன்.  ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் பக்கத்தில் இருந்த ஒரு சீன யுவதி சுஸ்கி விஸ்கி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். முழுவதுமாக தலையை திருப்பி அந்த புத்தகத்தைப் பார்க்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண்ணும் ஒரு சில நிறுத்தங்கள் தாண்டி இறங்கிப்போய்விட்டார். அதனால் அது எந்த மொழி, புத்தகத்தின் பெயர் என்ன என்று தெரியாமலேயே போய்விட்டது. ஆனால் அது வண்ணத்தில் இருந்த புத்தகம் என்று மட்டும் மனதில் நன்றாக பதிந்து விட்டது. கொஞ்ச நாளில் அதைப்பற்றி மறந்துவிட்டேன். 

சென்னை RT முருகனுடன்,2002 என்று நினைக்கிறேன், ஐரோப்பாவிலிருந்து வரும் காமிக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் சுஸ்கி விஸ்கி ஆங்கிலத்தில் வருவதாகவும் பல வருடங்களுக்கு முன்னர்(90களில்) தமிழில் வந்திருந்த ராஜா ராணி ஜாக்கி புத்தகத்தை ஆங்கிலத்தில் பார்த்ததாகவும் அவர் கூறியதாக சொன்னார்.  எனக்கும் நான் பேருந்தில் பார்த்தது ஞாபகம் வந்தது. இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் மீண்டும் எனது தேடுதலை ஆரம்பித்தேன். பல சுஸ்கி விஸ்கி ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் ராஜா ராணி ஜாக்கி பற்றி மட்டும் ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை. அப்போதுதான் சுஸ்கி விஸ்கி பற்றிய ஆங்கில புத்தகங்கள் பற்றிய தகவல் அடங்கிய இணைய பக்கம் கிடைத்தது. அதிலிருந்து புத்தகத்தின் பெயர் கிடைத்தது. அதன் பின்னர் சுலபமாக கிடைத்துவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு சீரியலாக வந்த புத்தகங்கள் தவிர்த்து தனியாக வந்த புத்தகங்களை தேடுவது கொஞ்சம் கஷ்டம் என்று பிறகுதான் தெரிந்தது. ஏனென்றால் தனியாக வந்த புத்தகங்களெல்லாம் கொஞ்சமாகவே பிரிண்ட் செய்யப்பட்டவை. அது மட்டுமில்லாமல் ஒரு சில புத்தகங்கள் ஒரு சில நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிந்தது. பல நாள் தேடலுக்குப் பிறகும் புத்தகம் இருக்கும் கடையோ, ebay listing-கோ கண்ணில் படவேயில்லை. ebay-ல் இருந்த புத்தகங்களெல்லாம் தமிழில் வந்தவை அல்ல. மேலும் அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சுஸ்கி விஸ்கி ஆங்கில புத்தகத்தையும் வாங்கவில்லை. அதனால் மீண்டும் ஒரு தொய்வு. 

2003இல் சவுதி அரேபியாவில்(of all the places in the world) இருந்தபோது "The Diamond Boomerang" கிடைத்தது. அதுதான் நான் முதன் முதலில் வாங்கிய சுஸ்கி விஸ்கி ஆங்கிலப்புத்தகம். 2004-ல் பெங்களூரில் இருக்கும் Blossom Book House சென்றிருந்தபோது 6 சுஸ்கி விஸ்கி புத்தகங்கள் மொத்தமாக கிடைத்தது. அவையும் இந்த "The Diamond Boomerang" சீரிஸ்ல் வந்தவையே.



http://suskeenwiske.ophetwww.net/albums/engels/bob.php

இந்த புத்தகங்கள் கிடைத்தது ராஜா ராணி ஜாக்கி புத்தகத்தை தேடும் பணியை மீண்டும் துவக்கி வைத்தது. அதே சமயத்தில் மற்ற சுஸ்கி விஸ்கி ஆங்கில புத்தகங்களையும் வாங்க ஆரம்பித்தேன்.

விரைவிலேயே மற்ற இரண்டு சீரிஸ்ல் வந்த புத்தகங்களை கடகடவென வாங்க ஆரம்பித்தேன்.

http://suskeenwiske.ophetwww.net/albums/engels/spikesuzy.php

http://suskeenwiske.ophetwww.net/albums/engels/ww.php

இருந்தாலும் ராஜா ராணி ஜாக்கி மட்டும் ebay-ல் வந்தபாடில்லை. மற்ற இணைய தளங்கள் வழியாகவும் கிடைக்கவில்லை. மீண்டும் கொஞ்சம் மந்தகாலம். பல மாதங்கள் கழித்து திரும்பவும் ஒருநாள் இந்த புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது புதிதாக வந்த சுஸ்கி விஸ்கி புத்தகம் பற்றிய விபரம் தெரிந்தது. "The Energetic Rascals" என்ற புத்தகம் Electrabel என்ற நிருவனத்துடன்  சேர்ந்து  வெளியிடப்படுவது தெரிந்தது. இந்த புத்தகத்தின் PDF கோப்பு அந்த நிறுவனத்தாலேயே கேட்டவர்களுக்கெல்லாம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களும் கேட்பவர்களின் நாட்டு முகவரிக்கேட்ப டச்சு மொழியிலோ, பிரெஞ்சு மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ இலவசமாக கேட்டவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டது. நானும் எனது விண்ணப்பத்தை அவர்களின் இணையதளத்தில் பதிவுசெய்தேன்.







அதே நாளன்று ராஜா ராணி ஜாக்கி Ebay-ல் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது. அவ்வளவுதான் உடனடியாக  எனது முதல் Bid-ஐ பதிவு செய்தேன். Bidding முடியும் நாளன்று அதிகபட்ச தொகையை போட்டுவிட்டு தூங்கப் போகலாம் என்றால், முதல் மூன்று நாட்களில் ஏறக்குறைய 20 பிட்டிங் பதிவாகிவிட்டது. அதனால் இது கண்டிப்பாக கடைசி நேர  Biddingல் மட்டுமே ஜெயிக்க முடியும். ஆனால் Bidding முடியும் நேரம் ஐரோப்பாவில் மாலை நேரம். எனக்கோ அதிகாலை 2 மணி. வேறு வழி, இரவு 1.50க்கு அலாரம் செட் செய்து விட்டு தூங்கப்போனேன். அலாரம் அடித்து எழுந்து போய் பார்த்தால் மேலும் பல Bids. EUR 35-ஐ தாண்டிவிட்டது. வழக்கம்போல Bidding முடிவதற்கு 20 வினாடிகளுக்கு முன்னர் என்னுடைய EUR 50 Bid-ஐ பதிவு செய்து ஒரு வழியாக புத்தகத்தை ஜெயித்தேன். உடனடியாக அதற்கான பணத்தை Paypal வழியாக செலுத்திவிட்டு அதன்  பின்னரே தூங்கப்போனேன்.

சில நாட்களில் அந்த புத்தகமும் வந்து சேர்ந்தது. அதே நாளன்று இலவச "The Energetic Rascals" புத்தகமும் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுத்தது.






இந்த விபரத்தை RT முருகனிடம் தெரிவித்தபோது அவருக்கும் ராஜா ராணி ஜாக்கி ஒரு Copy வேண்டும் என்று கேட்டார். அவருக்காக இந்த புத்தகத்தை இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் இன்றுவரை இரண்டவது பிரதி கிடைத்தபாடில்லை.

Other Links about சுஸ்கி விஸ்கி;
http://kakokaku.blogspot.sg/2009/03/blog-post_20.html
http://www.luckylimat.com/2010/01/blog-post.html
http://www.luckylimat.com/2010/01/blog-post.html


அவ்வளவுதான் இப்போதைக்கு. மீண்டும் சந்திப்போம்.

Happy Reading!

Monday, December 03, 2012


ரொம்ம்ம்ப காலத்திற்கு முன்னர் பிலிப் காரிகன் கதைகள் ஆங்கிலத்தில் வருவதைப்பற்றி பேசியிருந்தோம்.


அந்த வரிசையில் இதுவரை நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன் என்று சொல்லவும் வேண்டுமா!


இந்த புத்தகங்களில் வந்த கதைகளைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பாப்போம்.


இரண்டாம் பாகத்தின் முன்னட்டை 


 பின்னட்டை


இரண்டாம் புத்தகத்தில் வந்த முதல் இரண்டு கதைகள்.

D094 The Shiek’s Wife 9/1/69 to 11/15/69


D095 The Spy Novel 11/17/69  to 2/7/70


D095 தமிழில் மாண்டவன் மீண்டான் என்ற தலைப்பில் 2009ம்  ஆண்டு ஜூலை மாதத்தில் வந்தது! இந்த இதழின் அட்டைப்படம் இங்கே!


இந்த இதழைப்பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு இங்கே!

இதே புத்தகத்தில்தான் ராஜ்ஜியத்திற்கு ஒரு  ராணியும் வந்தது

கதைகளின் முதல் பக்கங்கள்




மீண்டும் விரைவில் சந்திப்போம்!

Sunday, December 02, 2012

வெள்ளியன்று இட்ட பதிவில் சக்தி காமிக்ஸ் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

சக்தி காமிக்ஸும் முத்து குழுமத்தில்லிருந்து வந்த காமிக்ஸ் தான்.

சக்தி காமிக்ஸில் வந்த(என்னிடம் உள்ள, மற்றும் எனக்கு அனுப்பப்பட்ட) மற்ற புத்தகங்களின் அட்டைப்படங்கள்.

1. சவாலுக்கு சவால் 


2. மடாலய மர்மம் 

3. காணாமல் போன சிறுவன் 




4. ராட்சச சிலை மர்மம் 


5. எரிமலைத் தீவில் சிந்துபாத் 





மீண்டும் விரைவில் சந்திப்போம்!

Saturday, December 01, 2012

NEVER BEFORE ஸ்பெஷல் இதழில் வரும் ஒரு புதிய ஹீரோ கில்/ஜில் ஜோர்டான்.

இவரது கதை இரண்டு  மட்டும் இதுவரை படித்துள்ளேன்(ஒரே புத்தகத்தில் வந்த இரு கதைகள்).

NEVER BEFORE ஸ்பெஷல்-இல் வரப்போகும் கதைக்காக காத்திருக்க முடியவில்லையென்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்! இரண்டு கதைகள் உள்ளன இந்த புத்தகத்தில்.



முன்னட்டையும், பின்னட்டையும்



 முதல் கதையின் முதல்பக்கம் (Murder by high tide)

இரண்டாம் கதையின் முதல் பக்கம் (Catch as catch can)


இந்தக் கதைகளைப் பற்றி மிக சுருக்கமான விமர்சனம். "உங்களுக்கு Tintin பிடிக்கும் என்றால் அனேகமாக இவரையும் பிடிக்க வாய்ப்புக்கள் அதிகம்!".

முதல் கதை ஹிட்டாகிவிட்டால் கூடியவிரைவில் இரண்டாவது கதையும் வர வாய்ப்புகள் உண்டுதானே!

ஆங்கிலத்தில் மற்ற கதைகள் வரும்போலத்தான் தெரிகிறது 


மீண்டும் சந்திப்போம்!

Friday, November 30, 2012

ரொம்பநாள் ஆகிவிட்டது இங்கே வந்து! 

பெரிய பதிவுகளை பற்றி யோசித்தாலே அதில் உள்ள கஷ்டத்தை நினைத்து அந்த வேலை அப்படியே தள்ளிக்கொண்டே போகிறது. அதனால் இனி சின்ன சின்ன பதிவுகளாக முயற்சிக்கலாம் என்று நினைக்கிறன். பார்க்கலாம் இது எப்படி போகிறது என்று. அந்த வரிசையில் முதல் பதிவு.

ஒரு கதை தலைப்பு இரண்டுமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எனக்கு தெரிந்த வரை ஒரே அட்டைப்படம் இரு இதழ்களில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது ஒரே ஒரு முறைதான் என்று நினைக்கிறன்.

முத்து காமிக்ஸின் இதழ் எண் 45 - ன் அட்டைப்படம் இங்கே!




இதே அட்டைப்படம் சக்தி காமிக்ஸில் வந்த அதே பெயர் கொண்ட புத்தகத்திலும் உபயோகப்படுத்தப்பட்டது.


NBS வேலைகள் முழு வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.


நீங்கள் இதுவரை முன்பதிவு செய்யவில்லை என்றால் உடனடியாக செய்யவும்.

மீண்டும் ஒரு குரும்பதிவோடு விரைவில் சந்திப்போம்.

Sunday, April 01, 2012


இரண்டு புதிய தமிழ் காமிக்ஸ் பதிவர்கள். 


அவர்கள் வரவு நல்வரவாகட்டும்.

Saturday, March 31, 2012

Saturday, December 31, 2011

சிஸ்கோவின் Come Back ஸ்பெஷல்!!!

Come Back ஸ்பெஷல் தந்த உற்சாகத்தில் இதோ ஒரு பதிவு.


சிலபல மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வரவிருக்கும் புத்தகங்கள் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.


இந்த பதிவில் கடைசியாக சிஸ்கோ கிட் புத்தகம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு வழியாக அந்த புத்தகம் வந்தேவந்துவிட்டது.


http://www.amazon.com/Cisco-Jose-Luis-Salinas-Reed/dp/1450780636/ref=sr_1_5?ie=UTF8&qid=1325337835&sr=8-5


ஆர்டர் கொடுத்து சென்றவாரம் இந்த புத்தகம் என் கைகளில் வந்து சேர்ந்தது. எல்லா கதைகளையும் இன்றுதான் படித்து முடித்தேன். படித்த கையோடு இதோ பதிவு.


புத்தகத்தின் அச்சு தரம் பற்றி முதலில். ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் வந்த கதைகளின் ப்ரூப் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் தரம் மிகவும் மோசம். அதைத்தவிர மற்றபடி இது கண்களுக்கு ஒரு விருந்து. சிஸ்கோ கிட் ரசிகர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம். செய்திதாள்களில் வந்த அதே அளவுக்கு படங்களை பார்ப்பதே ஒரு அற்புதமான அனுபவம் தான். ஒருசாதாரண கவ்பாயை உயிருடன் உலவவிட்டிருக்கும் ஜோஸ் சலினாசின் படங்களை கண்டிப்பாக இந்த அளவிலாவது பார்க்கவேண்டும்.  


அட்டைப்படம் ஒரு அட்டகாசமான டிசைன். முதன்முதலில் இந்த அட்டைப்படத்தை பாத்ததுமே புத்தகத்தை கண்டிப்பாக வாங்க முடிவு செய்துவிட்டேன். முன்னட்டையும், பின்னட்டையும் இதோ உங்களுக்காக.




ரீப்ரிண்ட்களில் சாதாரணமாக இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த புத்தகத்தில் உண்டு. 


சிஸ்கோ கிட் மட்டும் தனியாக இருக்கும் இந்த படம் தான் முதல் பக்கம்.





ஓவியர் இந்த தொடருக்காக வரைந்த மாதிரிப்படம்.





அதனை அடுத்து வருவது கதைப்பட்டியல்.





ஒரு புத்தகம் வெளியிட்டால் அதற்கு முன்னுரை தர ஒரு பிரபலம் வேண்டும். அந்த பார்முலாப்படி இதற்கு முன்னுரை உண்டு.





முதன்முதலாக சிஸ்கோ கிட் என்ற கதாபாத்திரம் வந்தது ஓ. ஹென்றி 1907-இல் எழுதிய ஒரு சிறுகதையில்தான். அந்தக்கதை இந்த புத்தகத்தில் முழுவதுமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த சிஸ்கோ கிட்டிற்கும் இந்த கதாபத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லாததால் இந்த கதை பற்றிய முன்னுரையும், கதையின் முதல் பக்கமும் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு.








டென்னிஸ் வில்கட் என்ற காமிக்ஸ் புத்தக ரசிகர் எழுதிய முகவுரையும் இதில் உண்டு.








இவையெல்லாம் முடிந்து கதைகள் ஆரம்பிக்கின்றன ஒரு வழியாக. மொத்தம் எட்டு கதைகள். இதில் தமிழில் வந்தது ஒன்று மட்டும்தான் என்று நினைக்கிறேன். AFI மாலைமதியில் மற்ற கதைகள் வந்திருந்தால் அதுபற்றி என்னிடம் தகவல் இல்லை. மன்னிக்கவும். உங்களுக்கு ஏதாவது விபரம்  தெரிந்திருந்தால் கமெண்ட்ஸ் பகுதியில் குறிப்பிடவும்.


முதல் கதை வந்த ஆண்டு 1951. கதையின் தலைப்பு Judge Hook. ஒரு டுபாக்கூர் ஜட்ஜ் எப்படி மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்பதுதான் கதை. இந்த கதை ஏற்கனவே 1983-ம் ஆண்டு வெளிவந்த சிஸ்கோ கிட் புத்தகத்தில் உண்டு.


கதையின் முதல்பக்கம் இதோ.



கதை எண் - 2: Princess Red Flower. ஒரு செவ்விந்திய இளவரசிக்கு சிஸ்கோ கிட் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் கதை. இந்த கதை கொஞ்சம் கொஞ்சம் காப்டன் டைகர் சாயலில் இருக்கும். செவ்விந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, அவர்கள் பொங்கி எழுகிறார்கள், ஆனால் போருக்கு போனால் நிறைய பேர் சாக வேண்டும், ஆனால் ஞாயமும் வேண்டும். இங்கேதான் சிஸ்கோ வருகிறார். போர் தவிர்க்கப்படுகிறது, ஞாயமும் கிடைக்கிறது. அனேகமாக இதுபோல பலகதைகள் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த கதையின் முதல் பக்கம் இதோ.





கதை எண் - 3: Jolly Station. ஒரு பாடகி பற்றிய கதை. அந்த பாடகி சிஸ்கோவை காதலிப்பது போல ஆரம்பிக்கிறது. ஆனால் கடைசியில்தான் தெரிகிறது அவருடைய தந்தையை காப்பாற்றத்தான் அப்படி செய்கிறார் என்று. சிஸ்கோவிற்கு கல்யாணம் ஆகிவிட்டால் சாகசங்கள் எப்படி தொடரும் :-)





கதை எண் - 4: Deadly Stage Ride. இந்த கதை தமிழில் வந்த கதைதான். லயன் காமிக்ஸில் இதழ் எண் 163.








இந்த இதழின் அட்டைப்படமும், ஆசிரியரின் ஹாட்லைனும்.








கதை எண் - 5: In search of Diablo. சிஸ்கோவின் குதிரை தந்திரமாக அவரிடமிருந்து திருடப்படுகிறது. அதை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவரின் குதிரை லக்கி லூக்கின் ஜாலி ஜம்பர் போல இல்லாவிட்டாலும் கொஞ்சம் சாகசம் செய்கிறது. 





கதை எண் - 6: Cisco's Bad Wound. போன கதையின் முடிவில் சிஸ்கோவிற்கு பட்ட அடிதான் இந்த கதையும் அஸ்திவாரம்.





கதை எண் - 7: The Loco K Ranch. ஒரு கூமுட்டை பண்ணையில் நடக்கும் கூத்துதான் இந்த கதை.





கதை எண் - 8: Gypsy Prophecy. இந்த கதையை எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆனால் தமிழ்தானா என்று தெரியவில்லை.





பதிப்பாசிரியரின் கஷ்டங்கள் பற்றி அவரது வார்த்தையில்.








மேலும் இந்த பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட மற்ற கதைகள் பற்றிய விளம்பரங்கள்.








எட்டு கதைகள், எட்டு முத்துக்கள்.


அடுத்த பாகம் இந்த ஆண்டு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.


அட சொல்ல மறந்துவிட்டேனே. 


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


Happy Reading!!!