Saturday, August 07, 2010

ஸ்பைடர் ரசிகர்களுக்கு ஒரு போட்டி!!!

காமிக்ஸ் உலக முடிசூடிய மன்னன் விஸ்வாவின் அற்புதமான பதிவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.கண்டிப்பாக ரசித்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறன். இதோ உங்களுக்கு ஒரு போட்டி.
இங்கே காணப்படும் படங்கள் எந்த ஸ்பைடர் கதையில்(தமிழில்) இருந்து என்று சொல்லுங்கள் பார்க்கலாம்! ஆனால் அதுமட்டுமே போட்டி அல்ல! இந்த புத்தகம் வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டுமே இந்த பதிலை சொல்லமுடியும் என்று நினைக்கிறன். இதோ கேள்வி! அந்த கதையில் இதன் பக்க எண்கள் என்னென்ன?





போட்டி என்று வந்துவிட்டால் பரிசு என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? என்ன பரிசு கொடுக்கலாம்?பரிசும் இந்தக் கதை சம்பந்தப்பட்டதே. வெற்றிபெற்றவருக்கு நேரடியாக(மின்னஞ்சல் மூலம்) தரப்படும்.

உங்கள் பதிலை Comments இல் போடவும். கடைசி தேதி : 12 ஆகஸ்ட் 2010.

Happy Reading!!!

25 comments:

King Viswa said...

மறுபடியும் திடீரென்று வந்து எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி முத்து விசிறி அவர்களே.

மீ தி பர்ஸ்ட்.

காமிக்ஸ் போட்டி அறிவித்த மாமன்னர் வாழ்க, வாழ்க.

King Viswa said...

மாமன்னரே,

முதல் மூன்று படங்கள் எனக்கு தெரிய மறுக்கின்றன. நான்காவது படமும் சிறிதாகவே இருக்கிறது. அமுக்கினாலும் பெரிதாக மறுக்கின்றன. சிறிது கவனிக்கவும்.

King Viswa said...

இருந்தாலும்கூட எனக்கு பதில் தெரியும். பொது மக்களின் நலன் கருதி பதிலை சொல்லவில்லை.

மூன்று நாட்களுக்கு முன்பு நாம் பேசும்போதுகூட இதன் விளம்பரத்தை பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தோம்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

முத்து விசிறி அவர்களே,

படத்தில் இருக்கும் வில்லன் "இயந்திர பொம்மைகளின் பேரரசர்" என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த கதை கொலைப்படையோ, அல்லது நீதிக்காவலன் ஸ்பைடரோ கிடையாது என்பதால் எனக்கு குழப்பமாக இருக்கிறது. நீங்களே சொல்லிவிடுங்கள்.

முழு வண்ணத்தில் ஸ்பைடரை காண்பது ஒரு தனி சுகம். சூப்பர்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

முத்து விசிறி அவர்களே,

படத்தில் இருக்கும் வில்லன் "இயந்திர பொம்மைகளின் பேரரசர்" என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த கதை கொலைப்படையோ, அல்லது நீதிக்காவலன் ஸ்பைடரோ கிடையாது என்பதால் எனக்கு குழப்பமாக இருக்கிறது. நீங்களே சொல்லிவிடுங்கள்.

எது கதை என்பதை விட, எது இல்லை என்று சொல்லிவிட்டேனே? உங்களைப்போல என்னிடம் அனைத்து புத்தகங்கள் இல்லை. யாரோ மண்டபத்தில் சொல்லி, நான் வந்து பதில் சொல்லவில்லை. ஆகையால், எவ்வளவு சரியான விடையோ, அவ்வளவு அளவுக்கு பரிசை தரவும்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

விஸ்வா,

//முதல் மூன்று படங்கள் எனக்கு தெரிய மறுக்கின்றன. நான்காவது படமும் சிறிதாகவே இருக்கிறது. அமுக்கினாலும் பெரிதாக மறுக்கின்றன. சிறிது கவனிக்கவு//

படங்கள் தெளிவாகவும், அழகாகவும் தெரிகின்றன.

Vedha said...

welcome back Muthu Fan. nice to see you back again.

Vedha said...

i have no idea about the stories and so, am not in the race to win the prizes.

all the best to the winners.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

ஒண்ணுமே புரியல உலகத்துல.

என்னமோ தெரியுது (ஸ்பைடர் ஸ்கான்கள்)

மர்மமாய் இருக்குது (என்ன கதை இது?).

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

புதிய பிளாக் டெம்பிளேட் சூப்பர்.

SIV said...

படங்களை பார்த்து ரசிக்கதான் தெரிகிறது. விடை தெரியவில்லையே

King Viswa said...

மாமன்னரே,

இதென்ன திடீர் மாற்றங்கள்? அருமை. அருமை. இப்போது உங்கள் வலைப்பூ சூப்பர் ஆக இருக்கு. அதுவும் டெம்பிளேட் கண்ணை உறுத்தாமல் அழகாக தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Anonymous said...

Welcome Back Muthufan.
What about Tex willer Post?( about 13 Tex comics in English ).
Waiting for that..........

Cibiசிபி said...

// காமிக்ஸ் போட்டி அறிவித்த மாமன்னர் வாழ்க, வாழ்க. //

இதை கண்ணா பின்னா வென்று வழி மொழி கிறேன்
.

Cibiசிபி said...

ஐயோ ஐயோ எனக்கு வேணும் ஆசை ஆசை :))
சமீபத்துல திருவிளையாடல் படம் பார்க்கல :D

ஹ்ம்ம் ஆனா பாத்த மாதிரி இருக்கு ஆனா பாக்காத மாதிரியும் இருக்கு


செகண்ட் pageல வர நாலு கை மனிதனும் ப்ரொபசர் மற்றும் ஆண்டனி யும் கொலைப்படைல இதே மாதிரி வீல் வண்டியில வர மாதிரி இருக்குது

ஆனா இது அது இல்ல

Moral of the Story is

இந்த கதை தமிழில் கலரில் விரைவில் வரவிருக்கிறது

ஏனுங்க தலைவரே நான் சொன்னது சரி தானுங்கோ
.

Cibiசிபி said...

ஹையா கண்டு பிடித்துவிட்டேன்

Page No.: 20,21,22 & 23

சரிதானே தலைவரே

பரிசு எனக்கு தான் :))

.

Cibiசிபி said...

// எனக்கு பதில் தெரியும். பொது மக்களின் நலன் கருதி பதிலை சொல்லவில்லை. //

விஸ்வா அண்ணே பதிலை எனக்கு சொல்லுங்கள்
நமக்குள்ள ஒரு உடன்படிக்கை
என்ன பரிசு கிடைக்கிறதோ அதை ஆளுக்கு பாதியாக பங்கிட்டு கொள்ளலாமே ( 60% 40% அப்புடீன்னாலும் கூட OK தான் )

கும்மிக்கு தலைவர் மன்னிக்கவும்
.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

அரசர் கொடுக்குற ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே கிடைக்கிற மாதிரி அருள் புரிய மாட்டாயா...சொக்கா?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

இப்படியெல்லாம் கேட்ட என்ன பதில் சொல்றது?

என்னாது, ஆயிரம் பொற்காசுகளா? அய்யோ, அய்யோ, அய்யோ. நான் எங்க போவேன், என்ன செய்வேன்? முத்து விசிறி கொடுக்குற ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே கிடைக்குற மாதிரி ஏதாவது அருள் புரிய மாட்டியா?

Arun Prasad said...

Hi

answer is Kollai padai

Doesn't know the page no .

It might also look like the story that came in thigil comics as a strip.

thanks
Arun

Yasin said...
This comment has been removed by the author.
Yasin said...

Hello Sir, How are you?. Itz been long time since we met. I couldnt meet you when you visited SG sometime back.

Answer: This spider story hasn't been published yet in Tamil. Am I correct? :)

Cibiசிபி said...

ஐயகோ இன்று கடைசி நாள்

என்ன பண்ணுவேன் யார போயி கேட்பேன் சொக்கா ??

தலைவரே தயவு செய்து மேலும் காக்க வைக்காதீர்கள்

முத்து விசிறி said...

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.

சரியான பதில் இந்த பக்கங்கள் தமிழில் வரவில்லை என்பதே. ஸ்பைடர் தோன்றும் கொலைப் படையில் விடுபட்டுப்போன பக்கங்களே இவை. சரியான பதிலை சொல்லி பரிசை வெல்கிறார் யாசின்.

இனிமேல் இதுபோல மொக்கை கேள்வி கேட்காமல் இருங்கள் என்று பதில் தெரிந்த சிலர் கேட்டுக்கொண்டதன்பேரில், இனிமேல் தமிழில் வந்த கதைகள் பற்றியே கேள்விகள் இருக்கும். யாரும் நெற்றிக்கண்ணை திறக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Suresh Australia said...

The information that are given my Muthu fan is always rare and original. You cant find it anywhere. This is really superb.

I hope he posts more and more infomraiton