தட்டி எழுப்பிய புத்தகங்கள் - 1
தெளிவாக இருக்கும்போது படிக்க ஆரம்பித்தால் கொட்டாவி விடவைக்கும் புத்தகங்கள் நிறையவே உண்டு. ஆனால் தூக்க கலக்கத்தில் படிக்க ஆரம்பித்து தூக்கத்தை தொலைக்க வைத்த புத்தகங்கள் சிலவும் உண்டு. இந்த பிளாகின் நெடிய தூக்கத்தை தொலைக்க வைத்த புத்தகங்களைப் பற்றியவைதான் இந்த தொடர் பதிவுகள்.
Zagor(சகோர்) போனெல்லி குழுமத்திலிருந்து 1961-முதல் வரும் ஒரு கதைத்தொடர். குரோவேசியா மற்றும் செர்பியாவிலும் இந்த கதைத்தொடர் பிரபலம் என்று விக்கிபீடியா சொல்கிறது.
2015-முதல் ஆங்கிலத்தில் இந்தத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. இது வரை ஐந்து புத்தகங்கள் வந்திருக்கிறது. போனெல்லி குழுமத்திலிருந்து வரும் கதைத்தொடர் என்பதால் இந்த புத்தகங்களை வாங்கி வருகிறேன்.
முதல் நான்கு புத்தகங்களை வாங்கவிரும்புவோருக்கு லிங்க் கீழே:
https://www.amazon.com/Zagor-Terror-Mauro-Boselli-Writer/dp/1942592027/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1516363189&sr=1-1&keywords=zagor+epicenter
https://www.amazon.com/Zagor-Sand-Guido-Nolitta-Writer/dp/1942592035/ref=sr_1_3?s=books&ie=UTF8&qid=1516363189&sr=1-3&keywords=zagor+epicenter
https://www.amazon.com/Zagor-Voodoo-Vendetta-Mauro-Boselli/dp/1942592078/ref=sr_1_6?s=books&ie=UTF8&qid=1516363189&sr=1-6&keywords=zagor+epicenter
https://www.amazon.com/Zagor-Supermike-Guido-Nolitta-Writer/dp/1942592108/ref=sr_1_7?s=books&ie=UTF8&qid=1516363189&sr=1-7&keywords=zagor+epicenter
இவர் கொஞ்சம் வித்தியாசமான ஹீரோ. இவர் காட்டிலே வசித்தாலும் குதிரை ஓட்ட மாட்டார். எங்கே போவதென்றாலும் "நட"ராஜாதான். டெக்ஸ் வில்லருக்கு ஒரு கார்சன் போல், இவருக்கும் ஒரு துணை உண்டு. கார்சன் போலவே எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார். அவரைப்போலவே இவரும் சாப்பாட்டு பிரியரும் கூட. ஆனால் எதாவது பிரச்சினை என்றால் இவர் "S" ஆகிடுவார்.
முதலில் வந்த நான்கு கதைகளும் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. இந்த தொடர் தேறுமா என்றுதான் யோசித்தேன். இருந்தாலும் இன்னமும் வந்துகொண்டிருக்கும் ஒரு தொடர் என்பதாலும், போனெல்லி குழுமமென்பதாலும் ஐந்தாவது புத்தக விளம்பரம் வந்தபோது ரொம்பவும் யோசிக்கவில்லை. ஆர்டர் செய்துவிடலாம் என்றுதான் முடிவுசெய்தேன். ஆனால் பதிப்பகத்தார் போட்ட கூக்லியை நான் எதிர்பார்க்கவில்லை.
ஐந்தாம் புத்தகம் மூன்று வேறுபட்ட அட்டைப்படங்களுடன் வரும் என்ற அறிவிப்புதான் அது.
புத்தகத்திற்கு மூன்று அட்டைப்படங்களை பார்த்தபோது எரிச்சல்தான் வந்தது. இந்த மொக்கை தொடருக்கு இதெல்லாம் அவசியம்தானவென்று. சாட் பூட் த்ரீ போட்டு அதில் ஒரு அட்டைப்படத்தை செலக்ட் செய்து, அத்துடன் மேலும் பல புத்தகங்களுக்கு ஆர்டரும் போட்டுவிட்டேன். கொஞ்ச நாளில் புத்தகமும் வந்து சேர்ந்தது. ஆனால் இந்த புத்தகத்தை மட்டும் உடனே படிக்கவில்லை. கடைசி புத்தகமாகத்தான் படிக்க எடுத்தேன்.
நான் புத்தகம் படிப்பது சாதாரணமாக இரவு தூங்கும் முன்னர்தான். காமிக்ஸாக இருந்தால் சுமார் 100 பக்கங்கள் ஒரு இரவில் படிப்பேன். மிகவும் களைப்பாக இருந்தால் இதில் பாதிதான் முடியும். இந்த புத்தகம் வேறு மொத்தம் 288 பக்கங்கள் என்பதால் படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். அது எவ்வளவு பெரிய தவறென்பது படிக்க ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது.
இந்த புத்தகத்துக்கு விமர்சனமாக நாம் சொல்ல விரும்புவது இவ்வளவுதான்.
இரவு பதினோரு மணிக்கு படுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து, 15 நிமிடங்களில் எழுந்து உட்கார்ந்து கொண்டு படித்தேன், எங்கே படுத்துக்கொண்டே படித்தால் இன்றைக்கே படிக்க முடியாமல் தூங்கி விடுவேனோ என்று. புத்தகத்தை படித்து முடிக்கும்போது காலை மணி 3.15. அதன் பின்னர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு தூங்கப்போகும்போது காலை மணி 5.3௦.
கதை என்ன எப்படி இருந்தது என்பதையெல்லாம் நீங்களே வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.amazon.com/Zagor-1000-Faces-Rubini-cover/dp/1942592167/ref=sr_1_9?dchild=1&keywords=zagor+epicenter&qid=1600318053&s=books&sr=1-9
(இந்த பதிவில் இதுவரை உள்ளது 2௦18இல் எழுதியது. கீழே உள்ளது சமீபத்தில் எழுதப்பட்டது)
இந்த தொடரின் அடுத்த இரண்டு புத்தகங்கள்(இரண்டுமே அட்டகாசமான புத்தகங்கள், விமர்சனம் விரைவில் - ஆனால் எனக்கே நம்பிக்கை இல்லை :-)):
https://www.amazon.com/Zagor-Origins-Guido-Nolitta-Writer/dp/1942592213/ref=sr_1_8?dchild=1&keywords=zagor+epicenter&qid=1600318197&s=books&sr=1-8
https://www.amazon.com/Zagor-Alien-Saga-Ferri-cover/dp/1942592310/ref=sr_1_6?dchild=1&keywords=zagor+epicenter&qid=1600318197&s=books&sr=1-6
இந்த தொடரின் சமீபத்திய புத்தகம்.
https://www.amazon.com/Zagor-Jaws-Madness-Ferri-cover/dp/1942592353/ref=sr_1_2?dchild=1&keywords=Zagor+epicenter&qid=1600317718&s=books&sr=1-2
Covid-19 பட்ஜெட் காரணமாக இந்த புத்தகம் வாங்குவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் வாங்கும் வேளை பிறக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்!!!
6 comments:
Super Sir.
வணக்கம் சார்..இது தமிழ் பேச வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே வருகிறேன்.. நம்மவர் காதில் பூ கணக்காக எடுத்துக் கொண்டு விட்டாரோ என தெரியவில்லை.. பதிவுக்கு நன்றி..
அருமை Sir 👌👏
உங்களுடைய பதிவு அவரை தமிழில் காண ஆவலைத்தூண்டுகிறது... போனெல்லியின் பல கதைகளை வெளியிடும் நமது லயன்காமிக்ஸ் இவரை கண்டுகொள்ளாதது ஏனோ....??
எனக்கு Zagor மிகவும் பிடிக்கும்.. ஆசிரியரிடம் கேட்டபோது... தமிழ் audience ஏற்றுகொள்ளும் அளவிற்கு இதன் logic இல்லை எனக் கூறிவிட்டார்... மிகவும் வருத்தமாக இருந்தது... Dan Dare கூட யோசிக்கலாம் இது வேண்டாம் என்பது ஆசிரியரின் கருத்து.... காலங்கள் கடக்கும் போது Zagorக்கும் தமிழ் பேசும் வாய்ப்பமையுமென நம்புகிறேன்....
நீங்கள் ரிவியூ எழுதிய வேளை, ஸாகோர் இன்று தவிர்க்க முடியாத ஹீரோ ஆகி விட்டார்
Post a Comment