Wednesday, February 28, 2018

சமீபத்தில்(22 Feb 2018) புதிய தலைமுறை  இதழில் "காமிக்ஸ் உலகின் மறுமலர்ச்சி" என்ற தலைப்பில் கிங் விஷ்வா எழுதிய கட்டுரை:

செப்டம்பர் 2007. கத்தார்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்துபிறகு சிங்கப்பூர் நாட்டுக் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்ட தயாளன், 2006 முதல்இரண்டு ஆண்டுகளாக கத்தாரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்அந்த நிறுவனத்தின் புராஜெக்ட் வேலைகள் டிசம்பர் மாதம் முடியப் போகின்றன என்று அவருக்கு அன்றுதான் தகவல் வந்ததுசிங்கப்பூருக்கு உடனடியாகத் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று அவர் ஏற்கெனவே முடிவெடுத்து இருந்ததால்அடுத்து என்ன செய்யலாம்எந்த நாட்டிற்குப் போகலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.

அன்றிரவு தனது கணினியில் சில ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்பிரபல தமிழ் காமிக்ஸ் கதாபாத்திரங்களான இரும்புக்கை மாயாவிலாரன்ஸ் - டேவிட்ஜானி நீரோஸ்பைடர்இரும்பு மனிதன் ஆர்ச்சி ஆகியோரைப் பற்றிய சில புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்தயாளனின் சிறப்பு அம்சமேஇந்தக் கதைகளைப் பற்றிய பின்னணி விவரங்களைச் சேகரிப்பதுதான்அப்போதுதான் அவருக்குள் ஒரு மின்னல் தோன்றியதுமேலே குறிப்பிட்ட முக்கியமான காமிக்ஸ் நாயகர்கள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டவர்கள்அவர்களது கதைகளில் இன்னமும் பெரும்பாலான கதைகள் தமிழில் வராமல் இருக்கின்றன என்பதை உணர்ந்த தயாளன்இங்கிலாந்திற்குச் செல்வது என்று முடிவெடுத்தார்.

மூன்றாவது வாரத்திலேயே லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துவிட்டதுஆனால்வேலைக்குச் சேரும்போது தயாளன் சில நிபந்தனைகளை விதித்தார்.

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும்தான் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வேன்தேவைப்பட்டால்ஐந்தாவது நாளில்கணினி மற்றும் கைபேசி மூலமாகத் தொடர்புகொள்ளுங்கள்’ என்றார்.

இப்படியாகஒவ்வொரு வாரமும் வெள்ளிசனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அவருக்கு கிடைத்தனமுதலில்தமிழில் பிரபலமான காமிக்ஸ் நாயகர்களின் முழுமையான லிஸ்ட்டை உருவாக்கினார் தயாளன்அதன் பின்னர்தமிழில் வந்த கதைகளை தனியாக குறித்தார்வராத கதைகள் எந்தெந்த இதழ்களில் எப்போது முதல் தொடராக வந்தன என்பதையும் குறித்தார்பின்னர் வேட்டையில் இறங்கினார்ஒவ்வொரு இடமாகச் சென்று தேடுவதற்காகஒரு காரையும் வாங்கினார்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு வார இறுதியிலும் பிரிட்டனின் புத்தகச் சந்தைபழைய புத்தக விற்பனைச் சந்தைவிற்பனை அங்காடிகள்பழைய புத்தகக் கடைகள் என்று தேடினார்இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்த தேடலின் முடிவில் அவர் தனது லிஸ்ட்டில் இருந்த 1,500-க்கும் மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்தார்இங்கிலாந்தின் பிரபலமான காமிக்ஸ் படைப்பாளிகள்பத்திரிகை எடிட்டர்கள்வரலாற்று ஆய்வாளர்கள் என்று அனைவரையும் சந்தித்துதான் வாங்கிய புத்தகங்களுக்கான பின்னணி விவரங்களையும் திரட்டினார்.

இப்படியாகமூன்று ஆண்டு கால காமிக்ஸ் வேட்டையில் இவர் செலவழித்த பணம் எவ்வளவு தெரியுமாஇந்திய ரூபாய் மதிப்பில்ஏறக்குறைய கால் கோடி ரூபாய். 2008-இல் ஆரம்பித்த இந்தத் தேடல் 2010-இல் நிறைவு பெற்றதுதனது லிஸ்ட்டில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிய பிறகுமுதல் வேலையாகதனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிவிட்டார்.

அடுத்த சில மாதங்களில்சிங்கப்பூரில் புதிய வேலையில் செட்டில் ஆனதும்தினமும் ஒரு புத்தகம் என்ற வகையில்தான் வாங்கிய அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் ஸ்கேன் செய்து முடித்தார்தயாளன்அவை அனைத்துமே நாற்பதுஐம்பது ஆண்டு கால பழைய புத்தகங்கள் என்ப தால்அவற்றை போட்டோஷாப் பில் சரி செய்துஉயர் தரத்தில்அச்சிடும் வகையில் மாற்றினார்ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு இந்தியாவிற்குக் கிளம்பினார்.

தமிழில் அப்போது ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’ மற்றும் ‘காமிக்ஸ் கிளாசிக்ஸ்’ என்று மூன்று மாத இதழ்களை சிவகாசியைச் சேர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வந்ததுஆனால்விற்பனையில் தொய்வு ஏற்பட்டு இருந்த நிலையில்மாதம் ஒரு புத்தகம் என்ற நிலைமை போய்வருடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அபாயகரமான நிலைமை உருவாகி இருந்தது வருடத்திற்கு மூன்று இதழ்களின் கூட்டாக 30 புத்தகங்கள் வரவேண்டிய நிலையில், 2007-இல் மொத்தம் 5 காமிக்ஸ், 2008-இல் 9 காமிக்ஸ், 2009-இல் 5 காமிக்ஸ் என்று சுருங்கிகடைசியில் 2010-இல் ஒரே ஒரு புத்தகம், 2011-இல் இரண்டே இரண்டு என்ற நிலைமையில் இருந்ததுஇந்நிலையில் பழைய கதாநாயகர்களான இரும்புக்கை மாயாவிலாரன்ஸ் - டேவிட்ஸ்பைடர்இரும்பு மனிதன் ஆர்ச்சி ஆகியோரது கதைகள் வந்தால்விற்பனையில் ஒரு புத்துயிர் கிடைக்கும் என்று நம்பினார் தயாளன்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல நாடுகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்குத் தொடர்ச்சியாக செல்பவர் என்பதால்அவருக்கு சென்னைப் புத்தகக் காட்சியில் பங்கேற்பதன் முக்கியத்துவம் தெரியும்தனது 2 நண்பர்களுடன் இணைந்துலயன் காமிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு ஸ்டாலை வாடகைக்குப் பேசிஅதற்கான தொகையைச் செலுத்திவிட்டு சிவகாசிக்குப் புறப்பட்டார்.

தயாளனின் விடாமுயற்சியின் காரணமாகலயன் காமிக்ஸ் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தகக் காட்சியில் பங்கேற்க முன்வந்தார்கள்அது மட்டுமல்லஅதுவரையில் தமிழில் வெளிவராத இரண்டு இரும்புக்கை மாயாவியின் கதைகளைக்கொண்ட ‘கம் பேக் ஸ்பெஷல்’ என்று நூறு ரூபாய் புத்தகமும் அச்சிடப்பட்டதுஇதற்காக தயாளன்ஒரு மாதம் விடுப்பு எடுத்து வந்ததோடில்லாமல்தனது இரு நண்பர்களையும் அழைத்து வந்தார்தொழில்முறை மருத்துவரான அந்த நண்பருடன் இணைந்துஇந்த மூவரும் புத்தகக் காட்சியில் ஒரு புதிய பாதையை வகுத்துதமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.

புத்தகக் காட்சியின் உள்ளே நுழையும்போதே இரும்புக்கை மாயாவியின் படம் மற்றும் ஸ்டால் எண் விவரங்களை முதல் விளம்பரப் பலகையில் வரவழைத்ததுசந்தாவுக்கான படிவங்களை தயார் செய்ததுவாசகர்களின் தொடர்பு எண்முகவரியை வாங்கியதுஊடகங்கள்பத்திரிகைகளில் பேட்டிசெய்திகள் வரவழைப்பது என்று தயாளன் தொடர்ச்சியாக செயல்பட்டார்.

15 ஆண்டுகளாக விற்காமல் இருந்த பழைய காமிக்ஸ் புத்தகங்களை இரண்டு வாரங்களில் விற்றுத் தீர்க்க வகை செய்தார்.

பழைய காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்களான இரும்புக்கை மாயாவிலாரன்ஸ் - டேவிட்ஜானி நீரோ மற்றும் ஸ்பைடர் ஆகியோரது கதைகளை மறுபதிப்பு செய்வதற்குத் திட்டமிட்டபோதுபதிப்பாளரிடமே பழைய பிரதிகள் இல்லாமல் இருக்கமறுபடியும் உதவிக்கு வந்தார் தயாளன்அவர்தான் முதல் 22 புத்தகங்களைக் கொடுத்துஅவரது நண்பர் மூலமாக ஸ்கேன் செய்து உதவினார்.

மாற்றத்திற்கான விதையை விதைத்த தோடில்லாமல்அது தொடர்ந்து வளரவும் வகை செய்தார்தயாளன்கடந்த மூன்று ஆண்டுகளாகசிங்கப்பூரில் இருக்கும் 22 நூலகங்களுக்கும் அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் தனது சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்து வருகிறார்அது மட்டுமில்லாமல்சிறுவர் இதழ்கள்தமிழின் மிக முக்கியமான சிறுவர் இலக்கியப் புத்தகங்களையும் இந்த நூலகங்களுக்குப் பரிசாக அளித்து வருகிறார்.

தமிழில் மட்டும் எழுபதிற்கும் மேற்பட்ட காமிக்ஸ் சார்ந்த வலைப்பூக்கள் உள்ளனஇவர்கள் அனைவருக்குமே முன்னோடி தயாளன்தான்தேவைப்படுபவர்களுக்கு என்று அவரே முன்வந்து பல உதவிகள் செய்துள்ளார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு துறையில்படைப்பாளிகள்புத்தக வெளியீட்டாளர்களைக் கடந்துஅந்தத் துறையின் மீது அளவில்லாத அக்கறை கொண்ட தனி மனிதர்கள்தான் அந்தத் துறையையே அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்அப்படி தயாளனின் விடாமுயற்சியின் விளைவாகத்தான் இன்று தமிழ் காமிக்ஸ் இந்த நிலையில் உள்ளது.


காமிக்ஸ் களஞ்சியம்
தமிழில் மட்டுமில்லாமல்உலகின் பல நாடுகளில் இருந்து வெளியான காமிக்ஸ் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார் தயாளன்இத்தாலிபிரான்ஸ்பெல்ஜியம்ஜப்பான்அமெரிக்காகனடாஇங்கிலாந்துஇலங்கைஆஸ்திரேலியாநியூசிலாந்துஸ்வீடன்ஜெர்மனி என்று ஏகப்பட்ட நாடுகளில் காமிக்ஸ் வேட்டையாடி இருக்கும் இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை சேகரித்துள்ளார்.அரிய காமிக்ஸ் புத்தகங்களின் சேகரிப்பாளர்

சூப்பர்மேனின் முதல் காமிக்ஸ் புத்தகம் கோடிகளில் விற்பனையாவதைப் போலஉலக அளவில் பல முக்கியமான காமிக்ஸ் இதழ்களின் முதல் புத்தகத்தை இவர் சேகரித்து வைத்துள்ளார்பிரபலமான கௌபாய் ஹீரோவான டெக்ஸ் வில்லரின் கதையை ஆங்கிலத்தில் வெளியிட நினைத்த ஒரு நிறுவனம்சாம்பிளாக மொத்தமே மொத்தம் 20 பிரதிகளை மட்டுமே அச்சடித்ததுஅந்த இதழ் முதற்கொண்டுடின்டின்னை உருவாக்கிய ஹெர்ஜினின் அச்சில் இல்லாத பிரதி வரைக்கும் இவர் சேகரித்து வைத்துள்ளார்அதைப்போலவேஹெர்மான்மோபியஸ்ஜோ கூபர்ட் ஆகிய காமிக்ஸ் ஜாம்பவான்கள் கையெழுத்திட்ட பிரதிகள்வரை இவரது சேகரிப்பில் இருக்கின்றன.
6 comments:

John Simon C said...

அருமையான கட்டுரை சார். தங்களது சேவை மிக சிறப்பானதொன்று. கணினியில் அலைபாய்ந்த அந்த காலத்தில் சுமார் 2005 வாக்கில் தங்களது முத்து டிரைபாட் கண்டு வியந்திருக்கிறேன். மிகவும் ஆழமான ஆராய்ச்சியும் கனவுமாக திரிந்த மூத்தவர் என்கிற வகையில் எனது மதிப்புக்குரியவர் நீங்களே. நன்றியும் அன்பும்.

Gandhi Babu The Great said...

என்னைப் போன்ற பலரின் பல நாள் ஆசையை மீளுருவாக்கம் செய்ததில் தங்கள் பங்கு மகத்தானது நண்ப. தங்களை ஒரு முறையேனும் இரு கரங்களால் தழுவி அணைத்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது . காமிக்ஸ் கதாநாயகர்கள் மாய பிம்பம் தான் ஆனால் மெய்யான கதாநாயகனாக கருத்தில் நிற்கிறீர். மீண்டும் மீளுருவாக்கம் செய்த வாழ்க்கையாய் பலவிதத்தில் இத்தகவல் தொடர்புலகில் காமிக்ஸ் ஐ படைத்ததில் அதை எம் கைகளில் தவழ செய்ததில் ஆரம்ப புள்ளியாயும் ஆதார ஸ்ருதியாயும் நீவிர் திகழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நண்ப . என்றென்றும் எம்மினிய தமிழ் போல் வாழ்க வாழ்கவே

POSTAL PHOENIX said...

தங்களை கடந்த ஈரோடு புத்தக திருவிழாவில் முதலில் சந்தித்துப் பேசியது மிக மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

BN USA said...

Nice post after a very long time. Welcome back!

giri suji said...

மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. திரு தயாளன் அவர்களின் இந்த முயற்சி, தமிழ் காமிக்ஸ்யை உயிர் பெற செய்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் பப்ளிஷர்ஸ்ன் மறுபிறப்புக்கு காரணமாக இருந்துள்ளார். இதற்கு எத்தனை கோடி நன்றி சொல்வது? உண்மையில் தமிழ் காமிக்ஸ் உலகின் தந்தை திரு தயாளன் அவர்கள் தான். இந்த கட்டுரையை எங்களுக்கு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.! வாழ்க வளமுடன்!!!

padmaloachan karthikayan said...

Awesome sir. No words to appreciate