Wednesday, April 14, 2010



ராசா... இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் என்று கேள்விப்பட்டேன்... மவராசனா இரு!

நீ என்னதான் ஆங்கிலத்தில் எழுதினாலும் நான் தமிழிலேயே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொடுத்திருக்கிறேன் என்பதை கவனி...ஆங்கிலத்திலும் தருகிறேன். இந்தா பிடி.. Happy Birthday! இதோ உனக்காக ஒரு சிறப்பு பதிவு. தமிழில் வந்த சில காமிக்ஸ்-களின் ஆங்கில மூலம்.

என்னுடைய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் 10 வயதில் ஆரம்பமானதென்றாலும் ஒரு முக்கிய திருப்பம் என்பது இந்த நூற்றாண்டு துவக்கதிலேதான் வந்தது. இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் என்னிடம் படிக்க அவ்வளவாக புத்தகம் இல்லை. அதனால் நான் சென்ற நாடுகளில் உள்ள புத்தகங்களையும்,internet-டிலும் படிக்க நேர்ந்தது. அப்படி தேடுகையில் கிடைத்ததுதான் தமிழ் காமிக்ஸ்களின் ரிஷிமூலங்களும், நதிமூலங்களும். முதன்முதலில் ஒரு தமிழ் காமிக்ஸ் ஹீரோவை ஆங்கிலத்தில் பார்த்தேன் என்றால் அது இரும்புக்கை மாயாவி தான். internet-டில் முதன்முதலில் எனக்கு மாட்டியது Steel Claw ஆங்கில இதழ்கள்தான்.


இந்த புத்தகங்களை ஆர்டர் செய்ய அப்போது என்னிடம் credit card இல்லை. அதனால் international Bank Draft எடுத்து அனுப்பிவிட்டு தினம் தினம் milehighcomics.com கு மெயில் அனுப்பி டிராப்ட் வந்து விட்டதா வந்துவிட்டதா என்று கேள்வி. ஒரு கட்டத்தில் அவர்களே வெறுத்துப்போய் காமிக்ஸ் புத்தகங்களை போஸ்ட் செய்து விட்டனர், என்னுடைய டிராப்ட் கண்டிப்பாக வந்து சேரும் என்ற நம்பிக்கையில். அவர்கள் போஸ்ட் செய்தபின்னர் தினம் தினம் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிடுவேன் லெட்டர் பாக்ஸ்-ஐ திறப்பதற்கு. இந்த காத்திருப்பு ஒரு சுகமான வேதனைதான் போங்கள்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நான் முதன்முதலில் தமிழில் படித்த கதையும் அதுதான்.

யார் அந்த மாயாவி முத்து காமிக்ஸின் 100 வது மலர். ஆனால் நான் படித்த முதல் தமிழ் காமிக்ஸ் கதை இதுதான். கண்டதுமே காதல் வந்து விட்டது, தமிழ் காமிக்ஸ் மேல். அது இன்றுவரை தொடர்கிறது.


அதன் பின்னர் பல புத்தகங்களை வாங்கினாலும் இந்த இரும்புக்கை மாயாவி இதழ்களுக்கு என் மனதில் எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய்க்கொண்டிருந்த இந்த ஷாப்பிங் கொஞ்சநாளாக நொண்டியடிக்கிறது. புத்தகங்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. கிடைக்கும் புத்தகங்களும் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது.

ஆனால் சமீப காலமாக வந்துகொண்டிருக்கும் விளம்பரங்கள் என்னுடைய ஆவலை நிறையவே தூண்டியுள்ளன என்றுதான் சொல்லவேண்டும். அதில் குறிப்பாக மூன்று புத்தகங்களை நான் ஆவலுடம் எதிர் நோக்குகிறேன்.

முதலாவது, Gentleman Detective ரிப் கிர்பியின் புத்தகம். முதல் தொகுப்பு ஏற்கனவே வந்துவிட்டது.



வாங்கிபடித்தும் விட்டேன். அற்புதமான தரம். தமிழில் எப்போது இந்த தரத்தில் வரும் என்று ஏங்கவைத்து விட்டது.

இந்த புத்தகத்தை பற்றி நிறைய negative opinion வந்தாலும் எனக்கு நிறைவை தந்த புத்தகம். இதன் இரண்டாம் தொகுப்பு மே மாதம் வருகிறது.



அடுத்ததாக வரவிருப்பது நம் எல்லோருடைய மனம் கவர்ந்த சீக்ரெட் ஏஜென்ட் பிலிப் காரிகன்.



அட்டைப்படமே பட்டயகிளப்புகிறது. ஜொள்ளு விட்டுக்கொண்டு எதிர்பார்கிறேன் இந்த தொகுப்பை.

கடைசியாக வரவிருப்பது என்னுடைய இன்னொரு favorite.

சிஸ்கோ கிட்!


வரும் தேதி அறிவிக்கப்படவில்லை ஆனாலும் இந்த பதிப்பகத்தில் இருந்து வரும் புத்தகங்களின் தரம் மிக உயர்தரம்.

வரவிருக்கும் கதையின் முதல் panel.


உங்களுக்கு Spectrum காமிக்ஸ் அறிமுகம் உண்டு என்றால் கண்டிப்பாக Heart of Juliet Jones தெரிந்திருக்கும். இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ள Mary Perkins On Stage மற்றும் Heart of Juliet Jones, புத்தக தரத்திற்காகவே வாங்கப்பட வேண்டியவை.

மேலும் பல ஆங்கில புத்தகங்களை பற்றி விரைவில் வேறொரு பதிவில் தகவல் தருகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான்.

அட மறந்தே போய்விட்டேன். எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முத்து விசிறி

21 comments:

King Viswa said...

உயர்திரு நண்பர் முத்துவிசிறி அவர்களுக்கு என்னுடைய முதற்கண் வணக்கம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் என்னுடைய உளம் கனிந்த மனமுவர்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பதிவுக்கு நன்றி தலைவரே.

புத்தக விவரங்கள் அனைத்தும் அருமை.

King Viswa said...

//நீ என்னதான் ஆங்கிலத்தில் எழுதினாலும் நான் தமிழிலேயே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொடுத்திருக்கிறேன் என்பதை கவனி...ஆங்கிலத்திலும் தருகிறேன். இந்தா பிடி.. Happy Birthday!//

எதெது, தலைவர் இன்று ஏகக்குஷி மூடில் இருக்கிறார் போல. நகைச்சுவை கலந்தோடுகிறது.

தலைவரே, உங்களை பின்பற்றி தானே நானே பிளாக் ஆரம்பித்தேன். இன்றுகூட நான் உங்களை தான் காப்பி அடித்துக்கொண்டு இருக்கிறேன், பல விஷயங்களில். குறிப்பாக அந்த பதிவின் இறுதி வரிகள்.

அதனால் நான் உங்களைப்போல ஆங்கிலத்தில் பதிவிடுவது தவறில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால், நீங்கள் இப்போது தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு மாறி விட்டீர்கள்

அதனால் நானும் மாறலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். பொருத்தருள்க.

King Viswa said...

ஒரு சிஷ்யனின் வேண்டுகோளை ஏற்று பல மாதங்களுக்கு பிறகு பதிவிட்ட குரு முத்து விசிறி அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

சுருங்க சொல்லின், தன்யனானேன் பிரபு.

காமிக்ஸ் பிரியன் said...

அருமை நண்பருக்கு,

சுவையான தகவல்கள். அதுவும் நான் ஆவலுடன் படிக்கும் டெய்லி ஸ்டிரிப் கதைகள் வேறு. விடுவேனா என்ன? காத்திருக்கிறேன் வாங்கிவிட.

அதுவும் அந்த முத்து காமிக்ஸ் அட்டைப்படம் அருமையிலும் அருமை. இன்றுதான் நான் அந்த அட்டைப்படதினை முதன்முதலில் பார்க்கிறேன்.

காமிக்ஸ் பிரியன் said...

மறந்தே போய்விட்டேன்.


எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

நண்பர்களுக்கு நற்செய்தி!

இவை மட்டுமின்றி வேதாளர், புஸ் சாயர், டிக் ட்ரேசி, ஃப்ளாஷ் கார்டன் உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களின் தொகுப்புகள் எல்லாம் அமேசானில் கிடைக்கின்றன!

இந்தியாவில் உள்ளோருக்கு ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்! ISBN எண் கொண்டு தேடிப்பார்க்கவும்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

காரிகன் அட்டைப்படம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

கனவுகளின் காதலன் said...

முத்து விசிறி அவர்களே,

முதலில் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு. சிறப்பான தகவல்கள். ரிப் கெர்பியை தமிழில் கண்டிட மனம் ஏங்குகிறது.

காமிக்ஸ் காதலன் said...

//காரிகன் அட்டைப்படம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!//

Repeattey.

காமிக்ஸ் காதலன் said...

நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

Vedha said...

great scot,

what a news. thanks for these updates and thanks for a post sir.

great to hear from you.

Vedha said...

happy Tamil new year to one and all.

SIV said...

அனைவருக்கும் சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

உள்ளூர் சந்தையில் தான் காமிக்ஸ்களுக்கு தட்டுபாடு என்றால் உலகச் சந்தையிலுமா? மனம் கவர்ந்த ஹீரோக்களை கண்கவர் புத்தகஙுகளில் பார்ப்பதும் கூட புத்தாண்டு கூட ஒரு கொண்டாட்டமே!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

சித்திரக் கதை - சிவா!

//அனைவருக்கும் சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்//

நியாயமா சிவா? இன்று தமிழ் புத்தாண்டு. மேலும் விவரம் அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

http://comicstamil.blogspot.com/2009/04/tamil-new-year-special.html

SIV said...

கோபித்து கொள்ளாதீர் அய்யம்பாளையம் நண்பரே. எங்கள் கம்பெனியில் 14க்கு விடுமுறை இல்லாத கடுப்பில் அப்படி கூறி விட்டேன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

Cibiசிபி said...

மிக நல்ல பதிவு
நீண்ட நாட்களுக்கு பிறகு முத்து விசிறி தமிழில் வந்து கலக்கிவிட்டார்

ILLUMINATI said...

Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

kindly delete this comment after reading...